|
'பாஷா, சூர்ய வம்சம் மற்றும் போக்கிரி' போன்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடசென்னை பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது. அண்ணா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை இப்படத்தை தயாரிக்கிறார். முனிஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அசோக் ராஜ் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக இது உருவாகிறது. சமீபத்தில் நடிகர் ஆனந்தராஜ் 'நானும் ரவுடி தான் மற்றும் கன்ஜூரிங் கண்ணப்பன்' போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் ஆனந்தராஜ் முந்தைய படங்களில் நடித்தது போல தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சம்யுக்தா காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார். ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் ‘மச்சி நீ பாடுடா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் வரிகளில் இப்பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா பாடியுள்ளார். Happy to drop the first single MACHI NEE PAADUDAA from #MadharasMafiaCompany! THE COMPANY ANTHEM is here – vibe & pure energy packed into one track! ▶️ … pic.twitter.com/sRJaQze1Rl — Dr Ishari K Ganesh (@IshariKGanesh) September 20, 2025 (责任编辑:) |
